செட்டிகுளத்தில் திடீரென அமர்ந்த புத்தர்

செட்டிகுளத்தில் திடீரென அமர்ந்த புத்தர்

வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

செட்டிகுளம் – மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக வீதியோரத்தில் சீமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பகுதிக்கு வந்த சிலர் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

இந்தப் பகுதியில் தமிழ் மக்களே பூர்வீகமாக வாழ்ந்து வருவதுடன், இந்த  சிலை வைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் செட்டிகுளம் முருகன் கோவில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )