தேர்தலை நிறுத்தும் எண்ணம் இல்லை

தேர்தலை நிறுத்தும் எண்ணம் இல்லை

உள்ளூராட்சி தேர்தலை இடைநிறுத்துவதற்காக அமைச்சரவையிலோ, அரசாங்கத்தினாலோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் மாவட்ட செயலாளர்களுக்கு விடுத்த அறிவித்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜே.வி.பி தலைவர் அனுரகுமார எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை கூறினார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி சபைளுக்கான தேர்தலுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலம் குறித்து அண்மையில் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டிப்பட்டிருந்தது. இது புதிய சட்டமே, இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு ஒழுங்குவிதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. 19 ஆம் திகதி இதனை எடுத்துக்கொள்ளவுள்ளோம். இப்போது தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இந்த சட்டமூலம் சிக்கலானது. இதனால் இதில் இந்த தேர்தலுக்கு இது பொருந்தாது என்று திருத்தங்களை கொண்டு வர வேண்டும். இல்லையேல் இதனை ணத்தி வைக்க வேண்டும்.

இதற்கு பின்னர் எத்தனையோ தேர்தல்கள் உள்ளன. இதனால் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் புதிய சட்டம் அவசியமற்றது என்று இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அதன்படி செய்ய வேண்டும்.

தற்போது அரசியலமைப்பு தொடர்பில் பெரிதாக கதைக்கும், ஜனாதிபதி, சட்டத்தரணிகள் இருக்கும் அமைச்சரவை இருக்கும் நிலையில், தேர்தலுக்கான கட்டுப்பணம் பெறுவதை இடைநிறுத்த அமைமச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதா? பொதுநிருவாக அமைச்சின் செயலாளரினால் மாவட்ட செயலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவே இந்த அறிவித்தலை விடுப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதா? என்று கேட்கின்றேன் என்றார்.

இவ்வேளையில் பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்தன கூறுகையில்,

அமைச்சரவையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் பெறுவதை நிறுத்த தீர்மானிக்கவில்லை. அது தவறான செய்தியாகும். நாங்கள் ஒருபோதும் இந்த தேர்தலை நிறுத்துவதற்காக உத்தரவும் விதிக்கவில்லை. தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை நாளை (இன்று) ஆராயப்படவுள்ளது. இதன்போது மனுதாரர்களை போன்று சட்டமா அதிபர் ஊடாக அரசாங்கமும் முன்னிலையாகும்.

தற்போது நாட்டுக்காக தவறாக திசை திருப்பும் செய்திகளும் வெளியாகின்றன. ஆனால் அமைச்சர் என்ற வகையில் தான் அவ்வாறான எந்தவித ஆலோசனைகளையும் எவருக்கும் வழங்கவில்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )