மொட்டுக் கட்சி மீண்டெழும்

மொட்டுக் கட்சி மீண்டெழும்

சமூக வலைத்தளங்களில் எங்களை நிராகரித்தாலும் மக்கள் மனங்களை விட்டு இன்றும் பொதுஜன பெரமுன நீங்கவில்லை என்றும் இதனால் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கட்சி பாரிய வெற்றியை பெறும் என்று நம்புவதாக அந்தக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக பொதுஜன பெரமுன சார்பில் கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். ஆனால் இந்த தேர்தலில் எங்களுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. சமூக வலைத்தளங்களில் பொதுஜன பெரமுன தொடர்பில் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் நாட்டின் அறிவுள்ள மக்கள் எங்களுடனேயே இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் இல்லாவிட்டாலும் மக்களின் மனங்களின் இன்னும் தாமரை மொட்டு இருக்கின்றது.

தேர்தலில் சவால்கள் உள்ளன. ஏற்கனவே சவால்களை வெற்றிக்கொண்டு மாபெரும் வெற்றியை பெற்ற கட்சியே இது. எங்களின் கொள்கைகளை மக்கள் இன்னும் நிராகரிக்கவில்லை இதனால் மக்கள் எங்களுடனேயே இருப்பர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )