
முரட்டு அரசின் முன்னால் மண்டியிடப் போவதில்லை
முரட்டுத்தனமான அரசாங்கத்திற்கு முன்னால் மண்டியிட போவதில்லை என்றும், வேண்டுமென்றால் இன்னும் எத்தனை வருடங்களுக்கென்றாலும் சிறையில் இருக்க தயார் என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டத்தை தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் மறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே, நேற்று கடுவலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு மீண்டும் திருப்பி அழைத்துச் செல்லப்பட்ட போது, சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து இவ்வாறு கூறினார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டிருந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்ட போது, வெளியில் நின்றிருந்தவர்களை பார்த்து அவர் கூறுகையில்,
”நாட்டு மக்களின் பிரச்சினைகளை கதைப்பது பயங்கரவாத் என்றால், இன்னும் எத்தனை வருடங்களுக்கு வேண்டுமென்றாலும் சிறையில் இருப்பதற்கு தயார். ஆனால் இந்த முரட்டுத்தனமாக அரசாங்கத்தின் முன்னால் ஒருபோதும் மண்டியிட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

