கிளிநொச்சியில் 160 க்கும் மேற்பட்ட மாடுகள் இறப்பு; கடும் குளிரே காரணம்

கிளிநொச்சியில் 160 க்கும் மேற்பட்ட மாடுகள் இறப்பு; கடும் குளிரே காரணம்

தற்போது காணப்படும் சீரற்ற கால நிலைகாரணமாக காணப்படும் மழை,கனமான காற்று மற்றும் குளிரினால் கிளிநொச்சியில் பல கிராமங்களிலும் 160 க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.

இந்நிலையில் இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடுமென கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும்,நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75ம்,பொன்னகர் கிராமத்தில் 13ம்,புன்னை நீராவியில் 7ம் நாகேந்திரபுரம் மற்றும் பூநகரியில் தலா ஐந்து மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகளும் வேறு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மாடுகளும் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க திருவையாறு கிராமத்தில் வீசிய கடும் காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதுடன் பல ஆடுகளும் மாடுகளும் காயமடைந்துள்ளன.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இறக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )