மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசுக்கு ஒரு மாத கால அவகாசம்; தவறினால் ஜனவரியில் அரசை விரட்டும் போராட்டம்

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசுக்கு ஒரு மாத கால அவகாசம்; தவறினால் ஜனவரியில் அரசை விரட்டும் போராட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு மாதகால அவகாசமே உள்ளது அதற்குள் இந்த நாட்டு மக்களுக்கு உரிய நிவாரணத்தினை வழங்காவிட்டால் அவர்களை ஆட்சியிலிருந்து துரத்துவதற்கான போராட்டத்தினை அனைத்தின மக்களையும் ஒன்றிணைத்து புதிய வருடத்தின் ஜனவரி மாதத்தில் கொழும்பில் ஆரம்பிப்போம் என மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி வலவாஹெங்குனுவெவ தம்மரத்ன தேரர் அறிவித்துள்ளார்.

மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் மெதமலுவயில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அனைத்தின சர்வமதத் தலைவர்களது விசேட ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே இந்த அறிவிப்பை விடுத்த அவர் மேலும் பேசுகையில்,

என்னிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு மதத் தலைவர் என்ற வகையில் இந்த நாட்டு மக்கள் எதிர்நோக்கும் துயரங்களை எடுத்துக் கூறினேன் ஆனால் அவர்களோ அதனை கருத்தில் கொள்ளவில்லை.மக்களுடய நிதி வீண்விரயம் செய்யப்படுகின்றது அவர்களோ சுகபோக வாழ்கையினை அனுபவித்து கொண்டிருக்கின்றனர் வாக்களித்த மக்கள் எதிர்பார்க்கும் எந்த விடயமும் நடப்பதை எங்களால் காணக்கூடியதாக இல்லை.

நோயாளர்களுக்கு தமது நோய்க்குரிய மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சிறார்களுக்கு போஷாக்கான உணவினை பெற்றுக் கொடுக்க முடியாமல் எத்தனையோபெற்றோர் கஷ்டப்படுகின்றனர்.அவ்வாறான நிலை மை இருக்கின்றபோது அரசாங்கம் வீண்விரயம் செய்யும் நிதியினை கட்டுப்படுத்தி இந்த நாட்டு மக்களுக்கு நிவாரணத்தினை வழங்கமுடியும்தானே?.அதனை அவர்கள் செய்வதற்கு முன்வரமாட்டார்கள்.

எனவே மக்கள் படும் துயரங்களை இனிமேலும் எங்களால் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது.அதனால் தான் அனைத்தின மக்களையும் சர்வமதத் தலைவர்களையும் ஒன்றிணைத்து மக்களுடைய நிதியினை வீண்விரயம் செய்யும் திருட்டு அரசியல்வாதிகளை துரத்துவதற்கான போராட்டத்தினை இன்று (நேற்று) மிஹிந்தலையில் இருந்து ஆரம்பிக்கின்றோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு மாதகால அவகாசமே உள்ளது அதற்குள் இந்த நாட்டு மக்களுக்கு உரிய நிவாரணத்தினை வழங்காவிட்டால் அவர்களை ஆட்சியிலிருந்து துரத்துவதற்கான போராட்டத்தினை அனைத்தின மக்களையும் ஒன்றிணைத்து புதிய வருடத்தின் ஜனவரி மாதத்தில் கொழும்பில் ஆரம்பிப்போம் என்றார்.

இந் நிகழ்வில் பெளத்த, இந்து,இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )