மட்டக்களப்பு காணி விவகாரம் பேச்சுக்கு நாம் தயார்; இல்லையேல் வழக்கு தாக்கல்

மட்டக்களப்பு காணி விவகாரம் பேச்சுக்கு நாம் தயார்; இல்லையேல் வழக்கு தாக்கல்

மகாவலி காணிகள் இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலக பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்பட போவதாக திங்கட்கிழமை போராட்டம் இடம்பெற்றுள்ளது.இந்த விடயம் தொடர்பில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்னவென கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, குறுகிய காலத்தில் விவசாயத்துறையை மேம்படுத்தாவிட்டால் உணவு பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரம் ஏக்கர் காணியில் அனுமதியில்லாத வகையில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.முறையான வழிமுறையில் அனுமதி வழங்காத காரணத்தால் தான் ஒரு தரப்பினர் அனுமதியில்லாமல் விவசாய நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ளார்கள்.ஆகவே இவ்விடயம் தொடர்பில் உரிய மாவட்ட மக்கள் பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் விவசாயத்திற்காக காணிகள் வழங்கப்படும் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்த எழுந்த இரா. சாணக்கியன் எம்.பி, மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என மகாவலி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட நாம் தயார்.விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரையும் சந்திக்கவுள்ளோம். அதில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்காதுவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )