அழகுராணி போட்டியில் பங்கேற்க பாலியல் இலஞ்சம் கேட்ட அவலம்; இலங்கைப் பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம்
மியன்மாரியில் நடைபெற்ற Mrs Grand International 2022 போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர் அந்த போட்டியின் ஏற்பாட்டாளரான எம்.ஆர்.என்ரரெய்ன்மென்ற் இயக்குனர் மலித் ரணசிங்க தன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவிருந்த திருமதி ரசாங்கி ஷாமிகா விதனவசம் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னுடன் கஞ்சா புகைக்க வருமாறு வற்புறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனக்கு நேர்ந்த அநீதி தொடர்பில் கொழும்பில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரசாங்கி ஷாமிகா விதனவசம் இவ்வாறு தெரிவித்தார்.
அவரது இந்தக் கோரிக்கை தனக்குப் பிடிக்காததால், இந்தப் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் தேவையான பணிகளை முன்னெடுக்கவும் மியான்மருக்குச் செல்லத் தேவையான பணத்தைத் தரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இறுதிப் போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை எனவும் உலகின் இருபத்தைந்து நாடுகளுக்கு முன்னால் இலங்கையின் பெருமை மாத்திரம் குழிபறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

