
வாசகியின் வாழ்த்துகள்!!
வாழ்த்துக்கள்!!
இரண்டாம் அகவையில்
அடிப்பதியும் அஞ்சுகமே!
நான் இப்பொழுதே கண்டேன்…!!
உன்னை…
உன்னுள் எத்தனை திறமைகளைப்
புதைத்து வைத்துள்ளாய்?
அரசியலைப் பார்த்தேன்,
ஆன்மீகத்தை பார்த்தேன்,
கண்ணீரைப் பார்த்தேன் ,
கவிதையைப் பார்த்தேன்.
வீரம் ,மகிழ்ச்சி, எழுச்சி, ஈரம்,
இன்னும் எத்தனையோ!
பெண்ணினத்தின் கண்ணீரைத்
துடைக்கும் கைகளாய்!
வீரத்தைத் தூண்டும்
தூண்டுகோலாய் நீ!
வந்திருக்கிறாய்
சிந்தனையை தூண்டுகிறாய்!
சிறகை வளர்க்கிறாய்!
பறக்கத் துடிக்கிறது
பலரது இதயம்!
உன் பெயர் என்னவென்று சொல்லவா?
ஆம்! நீ தான்
‘எழுநிலம்’
மேலும் செழுமை பெற,
செழிக்க,
சிறக்க
ஒரு வாசகியின் வாழ்த்துக்கள் !
அன்புடன்….
முல்லை
CATEGORIES இலக்கியம்

