சிங்கப்பூருக்கு அருகில் கடலில் தத்தளித்த 300 இலங்கையர்களையும் அழைத்து வரப் பேச்சுவார்த்தை

சிங்கப்பூருக்கு அருகில் கடலில் தத்தளித்த 300 இலங்கையர்களையும் அழைத்து வரப் பேச்சுவார்த்தை

சிங்கப்பூருக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட கப்பலில் இருந்த 303 பேரும் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அகதிகள் என சந்தேகிக்கப்படும் 300 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று வியட்நாம் – சிங்கப்பூர் எல்லையில் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்ததாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வியட்நாம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரியும் உறுதிப்படுத்தினார்.

303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வியட்நாம் மற்றும் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள கடலில் விபத்துக்குள்ளானது.

கப்பல் ஆபத்தில் சிக்கியபோது, அங்கிருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்புகொண்டு, இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் இது தொடர்பாக வியட்நாம் கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்திற்கு தகவல் கொடுத்தனர். அப்போது வியட்நாமிய பிரதேசத்தில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்ததாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்பின்னர், வியட்நாம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அரசாங்கங்களைத் தொடர்புகொண்டு அந்தக் கப்பல் குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொண்டது.

இது தொடர்பில் அருகில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர், கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )