பணம் வேண்டாம் நீதியே வேண்டும்; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

பணம் வேண்டாம் நீதியே வேண்டும்; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

எங்கள் கைகளால் இராணுவத்திடம் கையளித்தவர்கள், வீடுகளில் வைத்து எங்கள் கண் முன்னால் கடத்தப்பட்டவர்கள், வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள்,கடலில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்கள், இராணுவத்திடம் கையளித்த குழந்தைக்கு என்ன நடந்தது என அறியவும், நீதி கோரியுமே நாங்கள் போராடுகிறோம். எங்கள் உறவுகளின் உயிர்களுக்கு 2 இலட்சம் விலை பேச வேண்டாம் என காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இழப்பீட்டு அலுவலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக காணாமல் போனமைக்கான சான்றிதழை பெற வேண்டிய தேவை இல்லை எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கின் உறவினர்களை தேடும் போராட்டம் எட்டு மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தித்தான் போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றோம். 5 ஆண்டுகள் வீதியில் இறங்கி போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். நீதி கிடைக்காது எங்கள் போராட்டம் ஓயாது என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் இரணப்பாளர் ம.ஈஸ்வரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

உங்களிடம் உள்ள நிதிகளை அரசின் தேவைகளுக்கு பயன்படுத்துங்கள். எங்கள் உயிர்களுக்கு விலை பேச வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.(7

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )