
ஜெனீவா பேரவையில்; இலங்கைக்கு 6 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் ?
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிந்தியா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளநிலையில்அதற்கு முன்னதாக, இந்த முன்நகர்வுக்கு எதிராக ஆறு நாடுகள் மட்டுமே வாக்களிக்குமென இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது .
அமெரிக்கா, கனடா, ஜே ர்மனி, பிரிட்டன் , மா லாவி, மொ ண்டினீக்ரோ மற்றும் வடக்கு ம சிடோனியா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குகின்றன.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் தொடர்பான சாட்சியங்களைச் சேகரிக்கும் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கும் புதிய தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கையால் தேவையற்றவிதத்தில் நம்பிக்கையை வைத்திருக்க முடியாது என வெளிவிவகார அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம்46/1 தீர்மானத்தின்பிரகாரம் இந்த பொறிமுறையை உருவாக்கி யுள்ளது . புதிய தீர்மானம் அதன் பணிகளைத் தொடர மேலதிக வளங்களை ஒதுக்க வேண்டும் என்று கேட்கிறது.
தீர்மானம் நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்காக 47 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் இருந்து போதுமான எண்ணிக்கையிலான வாக்குகளை இலங்கையால் சேகரிக்க முடியாது என அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது .
இலங்கைஇங்கு ஆதரவா க பாரம்பரியமாக வாக்களிக்கும் பங்களாதேஷ் , ரஷ்யா போன்ற நாடுகள் இம்முறை உறுப்பினர்களாக இல்லை . இந்தியாவும் வாக்களிக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. நேபாளமும் ஒரு பிராந்திய சக்தியிடமிருந்து அவ்வாறு செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதால் விலகிக் கொள்ளும்.
பாரம்பரியமாக இலங்கையுடன் இருக்கும் பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளும் வாக்களிப்பில் பங்கேற்கமாட்டாது
“தீர்மானத்தை நகர்த்துபவர்கள் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு போதுமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் யதார்த்தத்துடன் இருக்கிறோம், ”என்று அந்த வட்டாரம் கூறிஇருக்கிறது..
இந்த தீர்மானம் அ க்டோபர் 6 அல்லது 7 ஆம் திகதி பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கைதரப்பு வாதத்தை முன்வைக்க ஜெனீவாவுக்கு செல்கிறார் .

