தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அடையாள உண்ணாவிரதம்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அடையாள உண்ணாவிரதம்

யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது.

தியாக தீபத்தின் நினைவேந்தல்கள் நடைபெற்று வரும் நிலையில் நாளை இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இன்றைய தினம் அடையாள உண்ணாவிரத்தில் பலர் கலந்துகொண்டுள்ளனர்,

அதேவேளை நாளை பல பாகங்களில் இருந்தும் ஊர்திகள் பவனிவர இருக்கின்றதோடு காலை 10 மணிக்கு முன்பதாக நல்லூர் தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடைந்து தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த 10.48 மணிக்கு மலரஞ்சலி இடம்பெறவுள்ளது.

மேலும் தியாக தீபம் திலீபன் பிறந்த ஊரெழுவிலிருந்து ஊர்தி நல்லூர் நினைவாலயத்தை நோக்கி வந்தடைய இருப்பதால் இந்த ஊர்திகளுடன் இணைந்து பயணித்துக் கொண்டு பொதுமக்கள் வரவேண்டும் என நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )