
தன்னம்பிக்கை
வாழ்க்கை எனக்கு
வண்ணமலர் சோலையில்லை…
போகின்ற பாதை
கற்களும் முட்களும்
நிறைந்த ஒற்றை வழிப்பாதை!
சென்றிடும் பாதையில்
கண்டதெல்லாம்…..
தோல்விகளும்
துரோகங்களுமே!
ஆனாலும்….
அத்தனை துயரத்திலும்
அழுதுஅடம்பிடித்து
எழுந்து
அன்னையாய்…தோழியாய்…
அரவணைத்து
அகமகிழ்ந்து
புதையுண்டு போகாமல்
தலைநிமிர்ந்து
நான் வாழ
கற்றுத்தந்தது- நம்பிக்கை.
நம்பிக்கை துணையிருந்தால்
எத்தனை ஆயிரம்
துயர்வரினும்
சூரியனைக்கண்ட
பனிபோல
ஓடிவிடும்….
நம்பிக்கையோடு
நடவுங்கள் – நாளை
விடியல்
நம்கையில்!!
-கலை
CATEGORIES இலக்கியம்

