பிரதமராக கோட்டா

பிரதமராக கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளனர்.

இந்த ஊடகச் சந்திப்பின் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்க விருப்பமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொடஆகியோரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர்கள் இவ்வாறு பதிலளித்துள்ளனர்.

“எங்களுக்கு விருப்பம்தான். கண்டிப்பாக வாக்களிப்போம்.கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாட்டுக்கு வரவேண்டும். அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவர் 69 இலட்சம் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி. அப்படியானால் அவர் பிரதமர் ஆவது யாருக்கு தான் பிடிக்காது? நான் அதற்கு எதிரானவன் இல்லை, அவர் கேட்டால் அவருக்கு வாக்களிப்போம்

அவர் நாடு திரும்புவதற்கான உரிமையை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் உறுதி செய்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டிற்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளலாம்.கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக இந்த நாட்டுக்கு வர வேண்டும் என்றும் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )