18 இலிருந்து 8 ஆனது வடக்கு ரயில் சேவை

18 இலிருந்து 8 ஆனது வடக்கு ரயில் சேவை

வடக்கு ரயில் பாதையில் தினசரி இயக்கப்பட்டு வந்த 18 ரயில் சேவைகளின் எண்ணிக்கை தற்போது 8 ஆகக் குறைந்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

‘டித்வா’சூறாவளி நிலவரத்திற்கு முன்னர் வடக்கு பாதையில் தினசரி 18 ரயில் சேவைகள் இடம்பெற்ற போதிலும், தற்போது அது 8 சேவைகளாகக் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்தார்.

குறிப்பாக புதன்கிழமைகளில், நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில்கள் (Intercity Express) மற்றும் இரவு அஞ்சல் ரயில்களைத் தவிர, சாதாரண பயணிகள் பயணிப்பதற்கு வேறு ரயில்கள் எதுவுமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ‘யாழ் தேவி’ கடுகதி ரயிலும்கூட ஒரு நாள் விட்டு ஒரு நாளே இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மலையக ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, மாத்தளை, கண்டி மற்றும் ஹட்டன் வரை தினசரி இயக்கப்பட்டு வந்த 42 சரக்கு மற்றும் பயணிகள் ரயில் சேவைகளில், தற்போது 8 சேவைகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், எஞ்சிய 34 சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த மாதத்தில் கம்பளை வரையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, மலையக ரயில் பாதையின் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருமாறு சங்கமாகத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தபோதிலும், இதுவரை அதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் கசுன் சாமர ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )