மகிந்த மீது கைவைத்தால் அழிவு நிச்சயம் – ஆளுந்தரப்புக்கு எச்சரிக்கை

மகிந்த மீது கைவைத்தால் அழிவு நிச்சயம் – ஆளுந்தரப்புக்கு எச்சரிக்கை

கிந்த ராஜபக்ச திறைசேரியைக் கொள்ளையடிக்கவில்லை, மாறாக மக்களின் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்” என்று அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்தது.

ஆளுந்தரப்புக்கு எச்சரிக்கை

விசாரணையின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறிய போது, அங்கு திரண்டிருந்த மொட்டுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மனோஜ் கமகே உரையாற்றினார்.

மகிந்த மீது கைவைத்தால் அழிவு நிச்சயம் - ஆளுந்தரப்புக்கு எச்சரிக்கை | Bribery Commission Mahinda Rajapaksa

விசாரணைக்கான காலம் குறித்து அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். “மே மாதம் என்பது பிரபாகரனின் கதையை முடித்த மாதமாகும். அதனால்தான் இந்த மாதத்தை அரசு குறிவைத்துள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆத்மாவை சாந்தியடைய வைக்கவே ஆளுந்தரப்பு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 ஒரு ‘சிங்கம்’ 

மகிந்த ராஜபக்சவை ஒரு ‘சிங்கம்’ என வர்ணித்த அவர், அவர் ஒருபோதும் குகைக்குள் ஓடி ஒளியமாட்டார் என்றும், சட்டத்துக்கு மதிப்பளித்து நேடியாக வந்து வாக்குமூலம் வழங்கிச் சென்றுள்ளார் என்றும் கூறினார்.

மகிந்த மீது கைவைத்தால் அழிவு நிச்சயம் - ஆளுந்தரப்புக்கு எச்சரிக்கை | Bribery Commission Mahinda Rajapaksa

திறைசேரி பிணைமுறி மோசடி மற்றும் நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர்களையும் இதேபோன்று அழைத்து வந்து விசாரிக்க அரசுக்குத் துணிவிருக்கின்றதா என்றும் அவர் சவால் விடுத்தார்.

“மகிந்த ராஜபக்ச என்பவர் இந்நாட்டு அரசியல் கலாசாரம். அவர் மீது கைவைத்தால் அழிவுதான் ஏற்படும்” என்றும் அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )