அமெரிக்க விளையாட்டு வீராங்கணைக்கு தண்டனை விதித்தது ரஷ்யா

அமெரிக்க விளையாட்டு வீராங்கணைக்கு தண்டனை விதித்தது ரஷ்யா

அமெரிக்க பிரபல கூடைப்பந்தாட்ட வீராங்கணை ‘பிரிட்னி கிரைனர்’ க்கு ரஷ்யாவின் உயர் நீதிமன்றத்தினால் சுமார் 9 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதான சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

31 வயதான ‘பிரிட்னி கிரைனர்’ தடை செய்யப்பட்ட போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த யூலை மாதம் ரஷ்யாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையிலேயே மேற்படி தண்டணை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறைத் தண்டனை காலத்தில் ‘பிரிட்னி கிரைனர்’ சுமார் 16,590 அமெரிக்க டொலர்களை தண்டப் பணமாக செலுத்த வேண்டும் என்றும் ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

இந்த தண்டனைக்கு எதிராக ‘கிரைனரின்’ சட்டவாதிகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாகவும் ரஷ்ய உச்ச நீதிமன்ற நீதிபதி அனைத்து மனுக்களையும் நிராகரித்த நிலையில் மேற்படி விடயம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட அதிபர் ‘ஜோ பைடன்’ எமது நாட்டு வீராங்கணை ‘பிரிட்னி கிரைமருக்கு’ வழங்கப்பட்டுள்ள நீண்ட கால சிறைத் தண்டனையை ஏற்றுக் கொள்ள முடியாது.

ரஷ்யாவின் சிறைகளில் இருந்து அவரை மீட்பதற்கான சகல வழிமுறைகளையும் நாம் மேற்கொள்வோம். எம்மிடம் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரை ரஷ்யாவிடம் கையளித்து எமது விளையாட்டு வீராங்கணையை நாம் மீளப்பெற்றுக் கொள்வதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்” என அதிபர் பைடன் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )