திருமண நாளில் இருதய நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய கனடாவாழ் தம்பதிகள்

திருமண நாளில் இருதய நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய கனடாவாழ் தம்பதிகள்

கடந்த பல வருடங்களாக இருதய நோயால் பெரிதும் அவதியுற்று முல்லை மாவட்டத்தை சேர்ந்த நோயாளர் ஒருவரின் இதய சத்திர சிகிச்சைக்கு தேவையான நிதியை கனடாவாழ் தம்பதிகள் வழங்கியுள்ளனர்.

தங்கள் மகன் திருமண நாளில் குறித்த நிதி உதவியை , நிவாரண அமைபின் ஸ்தாபகர் செந்தில் குமரனிடம் வழங்கியுள்ளனர்.

கனடாவில் பிரபலமான Quality வெதுப்பகத்தின் உரிமையாளர்களான திரு திருமதி பிரான்சிஸ் தம்பதிகள். ஏழாயிரம் டொலர்களை வழங்கி இருதய நோயாளர் ஒருவரை காப்பாற்றியுள்ளனர்.

அத்துடன் ஆண்டுதோறும் பனிரெண்டாயிரம் டொலர்களுக்கு மேல் நிவாரண அமைப்பின் பணிகளுக்காக குறித்த தம்பதிகள் நிதி வழங்கியும் வருகின்றனர்.

இது போன்று ஒவ்வொரு புலம்பேர் உறவுகளும் சிந்தித்து செயலாற்றினால் எங்கள் தாய்நில உறவுகளின் நிலை நிச்சயம் மாறும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )