சிறுமிகளிடம் அத்துமீறிய இலங்கை பிக்கு; அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

சிறுமிகளிடம் அத்துமீறிய இலங்கை பிக்கு; அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான 70 வயதான நாவோதுன்னே விஜிதா என்பவரே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மெல்பர்னில் வசித்து வரும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

1994 மற்றும் 2002 க்கு இடையிலான காலப்பகுதியில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக கவுண்டி நீதிமன்ற நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.

வயதான தேரரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான அனைத்து சிறுவர்களும் விகாரையில் சமய நெறி கற்க சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாக துன்பம் செய்ததாக எட்டு குற்றச்சாட்டுகளிலும்,

16 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் அநாகரீகமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

தேரர் பாலியல் ரீதியாக 5 வயது சிறுமியை துன்புறுத்தியதாக நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )