உங்களை பார்த்தாலே பயம் : தயவுசெய்து ஆவியாக வேண்டாம் – சாமர எம்.பிக்கு ஆளுங்கட்சி பதிலடி

உங்களை பார்த்தாலே பயம் : தயவுசெய்து ஆவியாக வேண்டாம் – சாமர எம்.பிக்கு ஆளுங்கட்சி பதிலடி

”உங்களின் முகத்தை பார்த்தாலே பயமாகத்தான் இருக்கின்றது. காலையில் பார்த்தால்கூட அப்படிதான். எனவே, தயவுசெய்து ஆவியாக வந்துவிட வேண்டாம். நாம் உங்களை பாதுகாப்போம். அச்சப்பட வேண்டாம்.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பதிலடி கொடுத்தார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி.,

” என்னை கொலை செய்தால் ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன்.” என குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நீதி அமைச்சர் சிரித்தபடி மேற்கண்டவாறு கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )