ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பில் சதி நடவடிக்கையா? 10 நிமிட மின் தடை குறித்து சி.ஐ.டி. விசாரணை

ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பில் சதி நடவடிக்கையா? 10 நிமிட மின் தடை குறித்து சி.ஐ.டி. விசாரணை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (சி.ஐ.டி.) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வெளியான தகவலை பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ நிராகரித்துள்ளார்.

நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அரச தொலைக்காட்சியான சுயாதீன தொலைக்காட்சி செய்தி சேவை (ஐ.டி.என்) உள்ளிட்ட ஏனைய தொலைக்காட்சி சேவைகளும் நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.

எனினும், ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததையடுத்து நேரடி ஒளிபரப்பு தடைபட்டது. பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் போது, ஜெனரேட்டர்கள் வழக்கமாக சம்பவம் நடந்த இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் தானாகவே இயங்கும். ஆனால் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் குறைந்தது 10 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபட்டது.

இதனால், ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவை நேரலையில் ஒளிபரப்ப தேசிய தொலைக்காட்சி சேவையினால் முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வெளியான தகவலை நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ நிராகரித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க நேற்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மின்சாரத்தை இயக்க மின்பிறப்பாக்கி பயன்படுத்தப்பட்டு, அது வெற்றிகரமாக பிரதான மின்பாதைக்கு நகர்த்தப்பட்டது.

எனினும் அரச தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் தடை ஏற்பட்டதாக தமக்கு தெரிவிக்கப்பட்டபோதும். என்ன தவறு நடந்தது என்று தமக்கு தெரியவில்லை. என்று படைக்கள சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாடாளுமன்றத்தில் மின்தடை ஏற்படவில்லை என உறுதியாக கூறமுடியும் என்றும் நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )