பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்கும் அரசாங்கம்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்கும் அரசாங்கம்

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை, பழைய முறையில் நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

முன்னதாக எல்லை நிர்ணய செயல்முறை முடிவடைந்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது.

எனினும், புதிய எல்லை நிர்ணய செயல்முறையானது, சிக்கலானது மற்றும் நீண்டது என்பதால், அடுத்த தேர்தலை, 1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின்கீழ் நடத்த ஆலோசனை நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தாமதமின்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்த திட்டத்தை அரசாங்கம் பரிசீலிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது, இந்தியப் பிரதிநிதி, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )