
நாட்டில் தொடர் குற்ற அலையா?; மறுக்கிறார் பதில் பொலிஸ் மா அதிபர்
நாட்டில் தொடர்ச்சியான குற்றச்செயல் அலை அடிப்பதாக காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் அப்படி ஒரு அலை கிடையாது என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு சில அரசியல்வாதிகள் நேரடியான அனுசரணையை வழங்கி வந்துள்ளனர் அந்த வகையில் நாட்டில் தற்போது குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தொடர்ச்சியான குற்றச்செயல் அலை அடிப்பதாக காட்டுவதற்கு சில தரப்பினர் முயற்சி செய்தாலும் அவ்வாறான தொடர் அலையான குற்றச் செயல்கள் நாட்டில் இடம் பெறவில்லை என்றார்.
CATEGORIES செய்திகள்