முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகள் பறிக்கப்படுமா ?

முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகள் பறிக்கப்படுமா ?

மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகள் தங்கியிருக்கும் வீடுகள் தொடர்பில் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தற்போது தங்கியுள்ள விஜேராம வீடு தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதிருப்பது தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,

நாங்கள் கூறியவற்றை செய்வோம். இந்த விடயத்தில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை. மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகள் தொடர்பில் கூறியவாறு தற்காலத்திலேயே நடவடிக்கை எடுக்கப்படும். அதனை செய்த பின்னர் அது எவ்வாறு நடந்தது என்று கேளுங்கள். அரசாங்கம் பொறுப்பேற்று 6 மாதங்களே ஆகின்றன. உரிய காலத்தில் உரிய விடயங்கள் நடக்கும். இந்த விடயத்தில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை. அதனை செய்யாமல் இருக்கவே சிலர் குழப்பமடைகின்றனர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )