
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்பதை கண்டறிவது அவசரமானது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடுரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர் பேரவை இதனை தெரிவித்துள்ளது.
2025ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாகின்றது என தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர் பேரவைஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுயாதீனமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதிசெய்வதற்காக அரசாங்கம் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகளை நாங்கள் வரவேற்க்கும் அதேவேளை விசாரணையின் இறுதி நோக்கம் குற்றவாளிகள் யார் அவர்களிற்கு உதவியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துவதாகயிருக்கவேண்டும் என வலியுறுத்துவதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.