பிரபாகரன் துரோகியுமல்ல ரோஹண விஜயவீர வீரனுமல்ல

பிரபாகரன் துரோகியுமல்ல ரோஹண விஜயவீர வீரனுமல்ல

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை துரோகி என்றும், ரோஹண விஜயவீரவை வீரன் என்றும் குறிப்பிட முடியாது. விடுதலை புலிகள் நூலகத்தையோ, பாடசாலைகளையோ, பல்கலைக்கழகங்களையோ தீக்கிரையாக்கவில்லை. தமது மக்களுக்கு சிறந்த முறையில் கல்வியை கற்பித்தார்கள். மக்கள் விடுதலை முன்னணி தீ வைப்பதை மாத்திரமே பிரதான கொள்கையாக கொண்டு தி செயற்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி.தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த

அவர் மேலும் பேசுகையில்,

1994 ஆம் ஆண்டு பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கியது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரச தரப்பினர் சித்திரவதைக்காரர் என்று குற்றம்சாட்டுகின்றார்கள் ஆனால் 2015 ஆம் ஆண்டு அவருடன் இணைந்து அரசாங்கத்தை உருவாக்கினார்கள்.

1994 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி பட்டலந்த விவகாரம் மற்றும் விஜயவீர படுகொலை பற்றி பேசவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு பட்டலந்த விவகாரத்தை குறிப்பிடாமலிருந்தால் இன்று இந்த விடயத்தை எவரும் பேசியிருக்கமாட்டார்கள்.

இரண்டு பக்கத்திலும் மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. கட்சியை தடை செய்ததால் ஆயுதமேந்தியதாக மக்கள் விடுதலை முன்னணி கூறுவதனை ஏற்க முடியாது. ஏனெனில் அக்காலப்பகுதியில் கம்யூனிசக் கட்சி, மாணவர் சங்கம் உட்பட பல கட்சிகள் தடை செய்யப்பட்டன. அவ்வாறாயின் அவர்களும் ஆயுதமேந்தியிருக்க வேண்டும் , 1971 ஆம் ஆண்டு ஆயுதமேந்தியதற்கான காரணம் என்ன? ஆகவே உண்மையை மூடிமறைக்க முயற்சிக்க வேண்டாம்.

1979 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டது. 1980 ஆம் ஆண்டு தொழிற்சங்க போராட்டத்துக்கு எதிராக சோமபால சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். 1980 ஜூலை கலவரம் தோற்றம் பெற்றது. இவ்வாறான பின்னணியில் தான் மக்கள் விடுதலை முன்னணி உட்பட அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி பொது மக்களையும் தமது கட்சி உறுப்பினர்களையும் படு கொலை செய்தது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை துரோகி என்றும், ரோஹண விஜயவீரவை வீரன் என்றும் குறிப்பிட முடியாது. 1988 காலப்பகுதிகளிலும் அதன் பின்னரான காலப்பகுதிகளிலும் சுமார் 64 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.மறுபுறம் சொத்துக்களை அழித்தீர்கள். விடுதலைப் புலிகள் நூலகத்துக்கு தீ வைக்கவில்லை. அவர்கள் தமது மக்களுக்கு சிறந்த முறையில் கற்பித்தார்கள். விடுதலை புலிகள் பாடசாலை, பல்கலைக்கழகங்களை, தொழிற்சாலைகளை தீக்கிரையாக்கவில்லை.. இராணுவத்துக்கு எதிராகவே செயற்பட்டார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி பாடசாலை, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை தீ க்கிரையாக்கியது . ஆகவே கடந்த காலத்தை மறந்து விட்டு தூய்மையானவர்களை போல் பேசக்கூடாது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )