
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்
யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தித் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தொடர் போராட்டம் பூரணை தினமான நாளை சனிக்கிழமை (12) காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடாத்தப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினர்கள், பொதுமக்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.