
இளமைக் காலம்
(அம்முக்குட்டி)
சின்னஞ் சிறு வயதில்
சிரித்து மகிழ்ந்த காலங்கள்
வண்ணப்பூக்கள்
பூப்பதுபோல்
வட்டமிட்டது…
பறந்து திரிந்து
கவலை ஏதுமறியாமல்
சுதந்திர வானில்
சிட்டுக்குருவியாய்
சிறகடித்தது….
சுற்றித்திரிந்த
காலங்கள்!
பசுமையான
நினைவுகளாய்….
அக்கால வாழ்க்கையிலே
துன்பச் சுவடே அறியாமல்
சுற்றித்திரிந்த
காலத்தில்
பள்ளித் தோழிகள் ஒன்றாகி
பாடித்திரிந்து
பல கதைகள்
தான்பேசி
பட்டாம்பூச்சிகள் போல
பறந்து திரிந்த காலங்கள்….
வயல் வெளி வரப்புகள்
எங்கும் ஓடி
வாய்க்கால் நீரில்
விழுந்து எழும்பி
கலகலவெனவே
சிரித்து விளையாடி
அம்மா கையால்
அடி வாங்கி
அழுது புலம்பி
தானெழுந்து
புன்னகையோடு
அம்மா மடிசாய்ந்து
வாழ்ந்த
சுகமான காலமது
மாலை சூரியன்
மறைகையிலே
அழகிய
இயற்கை காட்சியில்
தோழர் தோழியர்
தமை மறந்து
கூவிடும் புகைவண்டி
ஓசை கேட்டு
புகைவண்டி போல
நாம் மாறி
சுக்கு
புக்குவென
குளத்துக் கட்டில்
குதித்து நடந்த
காலங்கள்
பசுமையான
நினைவாக….!
சொல்ல சொல்ல மாளாது!
சொல்லிட்டு வார்த்தை
தானில்லை!
அத்தனை அழகான
ஊர் விட்டு
அகதியாக
அல்லலுற்று
துன்ப சுமையில்
வாழும் காலமதில்
மலரும் நினைவு
தனை மீட்க
மலர்தோட்டம்
உதவியது
வாழ்க வாழ்க
மலர்தோட்டம்…..
மனம் நிறைந்த
வாழ்த்துக்கள்!!

