இடைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய வேட்பு மனுக்கள் கோராமல் நடத்தக் கூடாது

இடைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய வேட்பு மனுக்கள் கோராமல் நடத்தக் கூடாது

இடைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய வேட்பு மனு கோராமல் நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணைக்குழுவை பணிக்குமாறு உயர்‌ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு புதிதாக வாக்காளராக பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள், யுவதிகள் கொண்ட ஒரு குழுவினால் இம்மனு சட்டத்தரணி எம் ஐ எம் ஐனுல்லா மூலம் தாக்கல் செய்யப்பட்டு அவருடைய அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் வாதாடவுள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதனை அடுத்து தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பாராளுமன்றத் தேர்தல் முடிந்த உடனே வைப்பதற்கான ஆயத்தங்கள் உள்ளதாக அறிய வந்துள்ளதாகவும் அத்தேர்தல் ஏற்கனவே அணைக்கப்பட்ட வேட்பு மனுவின் அடிப்படையில் வைக்கப்படல் தங்களுக்கு அத்தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனெனில் தாங்கள் முதன் முறையாக வாக்களிக்கும் உரிமை 23\24 ஆம் வருடங்களுக்கு பெற்றுக் கொண்டதாகவும் ஆகவே ஏற்கனவே பெறப்பட்ட வேட்பு மனுவானது தங்களுக்கு வாக்குரிமை இல்லாத பொழுது பெற்றுக்கொண்ட காரணத்தினால் தங்களுக்கு தேர்தலில் ஈடுபட முடியாமல் போய்விட்டது என்று இவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

இதனால் தங்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டி, இளையவர்களின் ஒரு குழு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. புதிய வேட்பு மனு கோராமல் உள்ளாட்சி மன்ற தேர்தல்களை நடத்துவது, தங்கள் போட்டியிடும் உரிமையை மீறுவதாகவும், இது அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் தங்கள் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

ஆகவே பழைய வேட்பு மனு அடிப்படையில் தேர்தலை நடத்தப்பட்டால் தங்களுக்கு அநீதி ஏற்படும் என்றும், இதன் மூலம் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1) விதிகளில் உள்ள சமத்துவ உரிமை மற்றும் சட்டபூர்வ அரசியல் செயல்பாட்டில் ஈடுபடும் உரிமையை மீறுவதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )