தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட அதிகளவானவர்கள் பெரும் ஆர்வம்;  பலருக்கு வாய்ப்பு கிட்டவில்லை

தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட அதிகளவானவர்கள் பெரும் ஆர்வம்;  பலருக்கு வாய்ப்பு கிட்டவில்லை

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியில்  சார்பில் போட்டியிடுவதற்கு அதிகளவானவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்புமனுவை பெற மிக அதிக அளவில் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேட்புமனுவை எதிர்பார்த்து காத்திருந்தும் அது கிடைக்காத சிலர் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரும் கடுமையாக உழைத்த சிலர், அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடலாம் என நம்புகின்றனர்.ஆனால் ஒரு கட்சியில் இருந்து போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதாலும், பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாலும் பலர் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்நிலைமை தொடர்பில் பலர் அதிருப்தியில் இருப்பது தெரியவருகிறது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை வெள்ளிக்கிழமை (11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )