இறுதிநேரத்தில் அமெரிக்க பயணத்திற்கு தடை: நெதன்யாகு உறுதி !

இறுதிநேரத்தில் அமெரிக்க பயணத்திற்கு தடை: நெதன்யாகு உறுதி !

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டினுடைய அமெரிக்க பயணத்திற்கு தடை விதித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டினை நேற்று (10) பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டின் சந்திக்கவிருந்த சந்தர்ப்பத்தில் நெதன்யாகுவிடம் இருந்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய அமைச்சரவையில் நெதன்யாகுவின் அறிவிப்பு தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தான் சந்திப்பை முன்னெடுக்கும் வரை இந்த விஜயம் அனுமதிக்கப்படமாட்டாது என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஈரானிய பதிலடியின் பின்னர் இஸ்ரேலை பாதுகாப்பதற்கான அமெரிக்க ஆதரவு மற்றும் அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்க இஸ்ரேல் தற்போது தயாராகி வருகிறது.

மேலும், ஈரான் தாக்குதலுக்கான பதிலடியை இஸ்ரேல் இதுவரை வழங்காத நிலையில் இவ்வாறான வெளிநாட்டு பயணங்களில் இஸ்ரேல் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )