குதிரையை கொண்டு ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ்: மக்களை கவர்ந்திழுக்க முயற்சி

குதிரையை கொண்டு ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ்: மக்களை கவர்ந்திழுக்க முயற்சி

கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு உயர் ரக குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து குறித்த குதிரைகள் தினமும் பிரசாரங்களை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டங்கள் இடம்பெறுகின்ற இடங்களை மையப்படுத்தி குறித்த இரு குதிரைகளும் காட்சிப்படுத்தப்பட்டு வருவதுடன் வித்தியாசமான முறையில் மக்களிடம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக பிரசாரம் செய்யப்படுகின்றன.

இதன்படி நேற்று சம்மாந்துறை பகுதியில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நடைபெறவுள்ள கூட்டத்திற்கு முன்னர், குதிரைகளை காட்சி பொருளாக பயன்படுத்தி மக்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னம் குதிரை என்பதுடன் இம்முறை இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை அவர் ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )