யாழில் இருந்து கொழும்பு நோக்கி வந்து சொகுசு பேருந்து விபத்து: சாரதியின் செயலால் பயணிகள் கடும் அச்சம்

யாழில் இருந்து கொழும்பு நோக்கி வந்து சொகுசு பேருந்து விபத்து: சாரதியின் செயலால் பயணிகள் கடும் அச்சம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.45க்கு இந்த விபத்து கம்பஹாவில் நடந்துள்ளது. எனினும், இந்த விபத்தில் அதிஸ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக பயணித்த அதிசொகுசு பேருந்து மழை காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பேருந்து சாரதியின் இந்த பொறுப்பற்ற செயல் தொடர்பில் அந்த பேருந்தில் பயணித்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Oruvan
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )