முகமூடி அணிந்த நபரால் யாழில் 4 வயது சிறுமி கடத்தல் முயற்சி

முகமூடி அணிந்த நபரால் யாழில் 4 வயது சிறுமி கடத்தல் முயற்சி

பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை நள்ளிரவு நேரம் வீடு புகுந்து நபர் ஒருவர் கடத்த முயற்சி மேற்கொண்டதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அல்வாய் மேற்கு பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போதே 4 வயது சிறுமியை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் முன்பக்கம் பேத்தியாருடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தார்.

சிறுமியும் சிறுமியின் சகோதரனும் அருகே உறங்கிக் கொண்டிருந்தார்கள் இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் சிறுமியை யாரோ ஒருவர் தூக்கி வைத்து இருப்பதை பேத்தியார் அவதானித்துள்ளார் .

அந்த நபர் முகமூடி அணிந்து இருப்பதை கண்டு அச்சத்தில் அவர் கூக்குரல் இட்டு கத்தியுள்ளார்.

இதனை அடுத்து சிறுமியை விட்டுவிட்டு முகமூடி அணிந்த நபர் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். என தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )