
நைஜீரிய தேவாலயத்தில் கொடூரம்; குழந்தைகள் பெண்கள் உட்பட்ட 50 பேர் பலி!
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின்போது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டனர்
தேவாலய கட்டிடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை துப்பாக்கி ஏந்தியவர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணத்தை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
அத்துடன் தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் மற்றும் நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை.
இந்த தாக்குதலில் பாதிரியார் மற்றும் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் காயமின்றி உயிர்தப்பினர்.
நகரத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு குறைந்தது 50 உடலங்கள் கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நைஜீரியா வடகிழக்கில் இஸ்லாமிய கிளர்ச்சி குழு ஒன்று ஆயுதப்போராட்டம் நடத்தி வருகிறது.
இந்தக்குழு பெரும்பாலும் வடமேற்கில் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.