
மகிந்த-ரணில்- அனுராவை விரும்பாத சு.க. தரப்பினர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகும் பலரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அல்லது ரணில் விக்ரமசிங்க அல்லது அனுரகுமார திசாநாயக்கவுடன் இணையாமல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு இருகட்சிகளின் கொள்கைகளும் ஒரே நோக்கத்தை கொண்டுள்ளதே காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து 13 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைக் கருத்தில் கொண்டு, 13 லட்சம் என்பது, 8 முதல் 9 லட்சம் வரை குறைந்துள்ளதாக, பலரும் கருதுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கான காரணங்கள் என்ன என்று அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களிடம் வினவியபோது, ஐக்கிய மக்கள் சக்தி உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறிய வர்க்கக் கட்சி என்றும், தற்போது சஜித் பிரேமதாச மட்டுமே அந்தக் கொள்கையை அமுல்படுத்துவதாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தவிர முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கொள்கைகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மிகவும் நெருக்கமானவை. இலங்கை தேசியக் கட்சியின் கிராம மட்ட உறுப்பினர்கள் தொடர்ந்தும் சஜித்துடன் இணைவதற்கு இந்தக் காரணமும் ஒன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் அமைப்பாளர் உள்ளிட்ட பலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.