
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலா நிதி ஒதுக்கப்படும்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுமாக இருந்தால் அதற்கு தேவையான நிதி ஜனாதிபதியினால் ஒதுக்கப்படும் என்று பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமரிடம் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசியலமைப்புக்கமைய இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் நவம்பர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.
இந்நிலையில் எவ்வேளையிலும் பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்கவும் முடியும். அத்துடன் பாராளுமன்றத்தினால் அதற்கான கோரிக்கையை முன்வைக்கவும் முடியும். இதன்படி பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுமாக இருந்தால் அதற்கு தேவையான நிதியை ஒதுக்கும் அதிகாரம் அரசியலமைப்பு ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய திறைசேரி ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்கி வைக்கப்படும் என்றார்.

