
சஹ்ரான் 6வது மாடியில் இருந்த போது 616 , 623 அறைகளில் இருந்தவர்கள் யார்?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரிகளான சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது கூட்டாளி இல்ஹாம் அஹமட்ஆகிய இருவரின் அடையாளத்தை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தாகஐக்கியமக்கள் சக்தியின் பேச்சாளர் முஜிபுர் ரஹ்மான் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார் , 2019 ஏப்ரல் 21 இல் கொழும்பு ஷங்ரிலா வில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலை அவர்கள் இருவரும்மேற்கொண்டவர்களாகும் -–முந்தைய நாள் அதே ஹோட்டலில் சந்தித்துள்ளனர் .
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கொழும்பு மாவட்ட முன்னாள் ஐ.தே.க எம்.பியானரஹ்மான் ., தற்கொலைக் குண்டுதாரிகளான இருவரும் ஏப்ரல் 20ஆம் திகதி இரவு ஆறாவது மாடியிலுள்ள அறையொன்றில் தங்கியிருந்ததாகக் கூறினார்.
தற்கொலை குண்டுவெடிப்புகளின் போது, ரஹ்மான் ஆளும்ஐ. தே .க தலைமையிலான நல்லாட்சிஅரசில் உறுப்பினராக இருந்தார்.
2019 ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு ஹாசிம் மற்றும் அஹமட் செல்வதற்கு முன்னர், ஹோட்டல் அறையில் இருந்த வர்களின் அடையாளங்களை வெளியிடுவதை தவிர்த்திருந்ததை தாம் அறிந்திருப்பதாக ரஹ்மான் கூறியுள்ளார் .
உயிர்த்த ஞாயிறு படுகொலை தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் அமர்வுகளை ஆராய்ந்த பின்னர், விருந்தினர்களின் பெயர்களை ஹோட்டல் வெளியிடத் தவறியது குறித்து அறிந்ததாக அவர் கூறியுள்ளார் .
இல்ஹாம் அகமட்டின் சகோதரர் மொஹமட் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட் சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருந்தார் .
கேள்வியொன்றுக்கு பதிலளித்த ரஹ்மான், சாய்ந்தமருதில் இராணுவத்துடனான மோதலை அடுத்து, ஒரு வாரத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட ஹாஷிமின் டிஎன்ஏ மாதிரிகளை அவரது மனைவி மற்றும் மகளின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், ஷாங்கிரிலா குண்டுவெடிப்பில் கும்பலின் தலைவர் கொல்லப்பட்டார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததாகத் தெரிவித்தார்.
ரஹ்மானின் கூற்றுப்படி, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு ஷங்ரிலா வில் தங்கியிருந்தவர்களின் விரிவான பட்டியல், அறை எண் 616 தொடர்பான தகவல்கள் இல்லாமல், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
வாசனை திரவிய வியாபாரி முகமது யூசுப் இப்ராகிம் ,இல்ஹாம் அகமது மற்றும் முகமது இப்ராஹிம் இன்ஷாப் அகமது ஆகியோரின் தந்தை ஆவார்.
மட்டகொடவிலுள்ள அவர்களின் ஆடம்பரமான இல்லத்தில் இடம்பெற்ற சோதனையின் போது அவரது மருமகள் தன்னைத்தானே வெடிக்கவைத்ததுடன் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டனர் .
ஷங்ரிலாவின் ஆறாவது மாடியில்மற்றொரு அறையில் தங்கியிருந்தவர்களின் அடையாளங்கள் கொழும்பு மேல் நீதிமன்றில் வெளியிடப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
விக்கிரமசிங்க-ராஜபக்அரசாங்கத்தின் உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பை வலியுறுத்திய முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர், 623ஆம் இலக்க அறையில் தங்கியிருந்தவர்களும் சஹ்ரான் ஹாஷிமின் குழுவுடன் தொடர்புபட்டதாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார் . , 2019 ஏப்ரல் 20, அன்று இரவு 616 மற்றும் 623 இல் தங்கியிருந்தவர்களை விட்டுவிட்டு குண்டுவெடிப்பின் போது ஹோட்டலில் இருந்த அனைத்து விருந்தினர்களின் விரிவான பட்டியலை ஷங்ரி-லா நிர்வாகம் தயாரித்ததாக ரஹ்மான் பின்னர் தி ஐலண்டிடம் கூறியுள்ளார் “.
623ஆம் இலக்க அறையில் சில வெளிநாட்டவர்கள் இருந்தனர், அதே சமயம் அறை 616 இல் சஹ்ரான் ஹாஷிமின் கூட்டாளிகள் இருந்தமை மர்மமானது , ”என்று முன்னாள் எம்.பிகூறியுள்ளார் .
உயிர்த்த ஞாயிறு படுகொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர ஆகிய இரு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஏன் சாட்சிகளாகப் பட்டியலிடவில்லை என்பதற்கான விளக்கத்தை அரசாங்கம் அல்லது ஒருவேளை சட்டமா அதிபர் திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டியுள்ளது என்று ரஹ்மான் கூறினார்.
இதேபோல்உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னதாக,நல்லாட்சி அரசின்போது தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் (என் ரி ஜே ] இரகசிய நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (ரி ஐ .டி ) தலைவராக இருந்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா. , சாட்சிகள் பட்டியலிலிருந்தும் விடுபட்டார்,என்றும் அவர் கூறியுள்ளார் .
2018 அ க்டோபர் 25 ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் போர்க்கால பாதுகாப்புச் செயலாளர்கோ த்தாபய ராஜபக்ச ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிஐடி டி சில்வாவை கைது செய்த சூழ்நிலையை முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் நினைவு கூர்ந்தார்.
உயிர் த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் போது, டி சில்வா சிறையில் இருந்தார்; அவருக்கு 2019 மே மாதம் பிணை வழங்கப்பட்டது.
முன்னாள் ரி ஐ டி தலைவரான அவர் இப்போது புத்தளம்பிரதிப்பொலிஸ் மாஅதிபராக பணியாற்றுகிறார்.
இந்த வாரம் (புதன்கிழமை முதல் வெள்ளி வரை) நடைபெறவிருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான மூன்று நாள் பாராளுமன்ற விவாதத்தின் போது அரசாங்கம் தெளிவாக வெளியிடவேண்டுமென முன்னாள் எம்.பி.கூறியுள் ளார்
ரஹ்மான் மேலும் கூறுகையில், பதிவு செய்யாமல் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்யக்கூடிய ஒரு குறிப்பிட்ட வகை நபர்கள் இருப்பதாக அவரது கட்சி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களில் இராஜதந்திரிகள், அவர்களின் பாதுகாப்புக் குழுக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் உளவுத்துறை உறுப்பினர்கள் இருந்தனர். இந்த விடயத்தை சரிசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவர் தவறு செய்திருந்தால் அரசாங்கம் திருத்த முடியும் எனவும் முன்னாள் எம்.பி.கூறியுள்ளார்.
ஷாங்கிரிலாவில் தற்கொலைப் படைத் தீவிரவாதிகளை சந்தித்தவர்களின் அடையாளங்களை மறைப்பதற்கான அவநம்பிக்கையான முயற்சி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் செல்வாக்கு மிக்க மற்றும் மிகவும் சக்திவாய்ந்த கரம் இருப்பதாக அவர்களின் நம்பிக்கையை கோடிட்டுக் காட்டுகிறது என்று ரஹ்மான் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியமக்கள்சக்தி வெற்றி பெற்றால் உயிர்த்த ஞாயிறு படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கட்சியும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அண்மையில் அறிவித்ததை ரஹ்மான் மீண்டும்நினைவுகூர்ந்துள்ளார்