மேதினத்தில் பலத்தை காட்ட கடும் முயற்சி!

மேதினத்தில் பலத்தை காட்ட கடும் முயற்சி!

தேர்தலுக்கான அறிவித்தல் நெருங்கும் நிலையில் எதிர்வரும் மேதினத்தில் தமது பலத்தை வெளிப்படுத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதிகளவில் மக்களை தமது மேதினக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து அதன்மூலம் தமது பலத்தை வெளிப்படுத்த கட்சிகள் எதிர்பார்த்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயாதீனமாக இயங்கும் கட்சிகள் உள்ளிட்டவை கொழும்பில் தமது மேதினக் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

இதேவேளை இந்தக் கூட்டத்தின் போது தமது அரசியல் கூட்டணிகள் தொடர்பில் அறிவிப்பதற்குகும் சில கட்சிகள் எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

முடிந்தளவு மேதினக் கூட்டத்திற்கு மக்களை அழைத்து வர வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளன.

இதனால் இப்போதே மேதினக் கூட்டத்திற்கான பஸ்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கைகளை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )