
ரணிலுடன் மொட்டின் பயணம் தொடருமா?; முடிந்த வரை பயணிப்போம், தொடர்ந்தும் போக முடியாத இடத்தில் நின்றுவிடுவோம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் முடிந்தளவு தூரம் பயணிப்போம் ஆனால், தொடர்ந்தும் போக முடியாத இடத்தில் நின்றுவிடுவோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நிகழ்வொன்றின் கலந்துகொண்டிருந்த மகிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விகளும் மகிந்த ராஜபக்ஷவின் பதில்களும் வருமாறு?
கேள்வி: மொட்டுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவாரா?
பதில்: வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கே நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
கேள்வி: அவர் பிரபலமானவரா? சிரேஷ்ட நபரா? இளம் நபரா?
பதில்: எவராவது ஒருவர் வருவார்.
கேள்வி: அப்படியென்றால் நாமல் (நாகமர பூ) பூக்குமா?
பதில்: அவர் போட்டியிடுவார் என்று நான் நினைக்கவில்லை.
கேள்வி: ரணில் விக்கிரமசிங்கவுடன் நீங்கள் பயணத்தை தொடர்வீர்களா? இடையில் நிறுத்தப்பட்டுவிடுமா?
பதில்: அவருடன் போகக்கூடிய அளவான தூரம் வரை பயணிப்போம். போக முடியாத இடத்தில் நின்றுவிடுவோம்.