ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும்; அமைச்சரவையில் ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும்; அமைச்சரவையில் ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான கலந்துரையாடல்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்த போதும், ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இதன்மூலம் பசில் ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்பத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்காக வழங்கப்பட்ட அழுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அழுத்தத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடித்து வைத்துள்ளார் என்பது அமைச்சரவையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அறிவித்ததன் மூலம் தெரியவந்துள்ளது.

பசில் ராஜபக்ச இலங்கைக்கு வந்தவுடனேயே ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தை பெற்றால் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு தயாரென பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் அறிவித்துள்ள போதிலும், அண்மைய முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளை கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்கவின் இந்த அறிக்கை எந்தளவு யதார்த்தமானது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )