
சாந்தனுக்கு விடை கொடுத்தது தமிழர் தாயகம்; மக்களின் கதறலுக்கு மத்தியில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் விதைப்பு (PHOTOS)












இந்தியாவில் உயிர்நீர்த்த சாந்தனின் புகழுடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் கடலுக்கு மத்தியில் நேற்று திங்கட்கிழமை மாலை வல்வெட்டித்துறை எள்ளங்குளம் இந்து மயானத்தில் விதை க்கப்பட்டது.
சாந்தனின் புகழுடலுக்கு ஆரத்தி எடுத்த சகோதரி உணவு ஊட்டிய தாய் என பெரும் இ கதறியழுத மக்கள் இகலங்கிய அரசியல்வாதிகள் .சாந்தனுக்காக மத வாழிபாட்டில் ஈடுபட்ட மதகுருக்கள் என இறுதிக்கிரியை நிகழ்வுகள் பார்ப்போரைக் கண்ணீர் விட வைத்தன.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு 33 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் இலங்கைக்கு அனுப்புவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக திருச்சியில் உள்ள இலங்கை தமிழருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த
நிலையில் அங்கு உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஜனவரி 24 ஆம் திகதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி புதன்கிழமை சாந்தன் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்த சாந்தனின் உடல் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் குடும்பத்தாரிடம் வழங்கப்படாது நீண்ட இழுத்தடிப்பு இடம்பெற்றது. பெரும் இழுபறிக்கு மத்தியில் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சாந்தனின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து சாந்தனின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அஞ்சலி நிகழ்வுகளை அரசியல் கைதிகளின் விடுதலைக்காக செயற்பட்டு வரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கமைய நீர் கொழும்பில் இருந்து எடுத்துவரப்பட்ட சாந்தனின் புகழுடல் அடங்கிய பேழை வவு னியாவில் வைத்து குரலற்றவர்களின் குரல் அமைப்பு பொறுப்பேற்று அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள உடுப்பிட்டிக்கு எடுத்து வரப்பட்டது.
சாந்தனின் புகழுடல் ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பிலிருந்து தரைவழியாக வல்வெட்டித்துறை உடுப்பி ட்டிக்கு எடுத்துவரப்பட்ட நிலையில் வவுனியாவிலிருந்து உடுப்பிட்டி வரை உள்ள வீதிகள் நகரங்கள்இ கிராமங்களில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் சாந்தனின் புகழுடலுக்கு மலர்கள் தூவிஇ ம லர்மாலைகள் அணிவித்து கதறியழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின்னர் உடுப்பிட்டியை வந்தடைந்த சாந்தனின் பூதவுடல் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டது. சாந்தனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றார் .அத்துடன் ”அண்ணா வருகின்றார் ..யாரும் அழ வேண்டாம்”என அவர் விடுத்த உருக்கமான வேண்டுகோளை அடுத்து சில நிமிடங்கள் அமைதி நிலவிய நிலையில் பின்னர் தாயார் இசகோதரி உட்பட அங்கு திரண்டிருந்தவர்கள் சாந்தனின் புகழுடலை கட்டியணைத்து கதறி அழுதனர்.
சாந்தனின் புகழுடலுக்கு உணவு ஊட்டிய தாய்
இந்நிலையில் சாந்தனின் இறுதிக்கிரிகள் நேற்று திங்கட்கிழமை நண்பகல் உடுப்பி ட்டி இலக்கணவத்தையில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கா ன மக்கள் இஅரசியவாதிகள் இ பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத குருமார்கள் பலரும் சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தனது தாயின் கையால் ஒரு வேளை உணவு உண்ண வேண்டும் என்பது சாந்தனின் இறுதி ஆசை யாகவும் தமது மகனுக்கு பல்சுவை உணவுகளை சமைத்துக் கொடுக்கவேண்டும் என்பது சாந்தனின் தாயின் ஆசையாகவும் இருந்தது ஆனாலும் இது இறுதிவரை நிறைவேறாக ஆசையாகவே போனது.
இந்நிலையில்இசாந்தனின் புகழுடலுக்கு தாயார் உணவு ஊட்டியமை அங்கிருந்தவர்களை கதறியழ வைத்தது. அதனைத்தொடர்ந்து வீட்டில் காலை 10:30 மணிக்கு சமயக் கிரியைகள் இடம்பெற்று சாந்தனின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவுகளால்
புகழுடலுக்கு வாய்க்கரிசி போடப்பட்டு ஊர்மக்களால் அருகில் உள்ள சனசமூக நிலையமொன்றுக்கு புகழுடல் 12:30 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இலக்கணாவத்தை தேவன் குறிச்சி அறிவகம் சனசமூக நிலைய த்தின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.மலர் அஞ்சலி இடம்பெற்றதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றது.
பிறந்த மண்ணிற்காகவும்இ தமிழினத்திற்காவும் உயிர்நீத்த அமரர் சாந்தனுக்கு தனது வீர ணக்கம் என அறிவகம் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற அஞ்சலி உரையில் தமிழக சட்டத்தரணி புகழேந்தி புகழாரம் சூட்டினார். இதில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகனின் அஞ்சலி உரையும் ஒலி நாடா மூலம் ஒலிபரப்பப்பட்டது.
சாந்தனின் புகழுடல் அவர் பிறந்துஇ வளர்ந்த பூர்வீக வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுஇ அங்கு சிறி து நேரம் வைக்கப்பட்டது. அப்போது அங்குள்ள கிணற்றின் நீரை தாயார் மகனுக்கு பருக்கினார். அதனை தொடர்ந்து அவரது புகழுடல் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்க இறுதி ஊர்வலம்
தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் இவீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக நாவலடிஇ உடுப்பிட்டிஇ வல்வெட்டித்துறைஇ பொலிகண்டி ஊடாக பயணித்து எள்ளங்குளம் இந்து மயானத்தை நோக்கி பயணித்தது .
இறுதி ஊர்வலத்தில் புலனாய்வாளர்கள்
இதேவேளை ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் மக்களோ டு மக்களாக புலனாய்வு பிரிவினரும் கலந்து கொண்டு கடுமையாக கண்காணிப்புகளை மேற் கொண் டிருந்ததையும் வீடியோ புகைப்படங்கள் எடுத்ததையும் அவதானிக்க முடிந்தது. ஊடகவியலாளர்கள் பிர முகர்கள் உள்ளிட்டவர்களும் கடுமையாக கண்காணிக்கப்பட்டனர்.
தலைவரின் இல்லத்தில் சாந்தனுக்கு அஞ்சலி
உடுப்பிட்டியிலுள்ள சாந்தனின் இல்லத்திலிருந்து எடுத்துரப்பட்டு பொது இடங்களில் அஞ்சலி செலுத்த ப்பட்டதை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள் ள இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாந்தனின் புகழுடல் எள்ளங்குளம் இந்து மயானத்தை சென்றடைந்த நிலையில் அங்கு இறுதிக்கிரியைகள் இடம்பெற்றதுடன் அங்கு சாந்தனின் புகழுடல் மக்களின் கத றல் இகண்ணீருக்கு மத்தியில் விதைக்கப்பட்டது.