நாங்கள் திட்டமிட்டே சிக்க வைக்கப்பட்டோம்; திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முருகன்

நாங்கள் திட்டமிட்டே சிக்க வைக்கப்பட்டோம்; திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முருகன்

தமிழர்களின் விடுதலைப் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளை நசுக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே எம்மை இந்த வழக்கில் திட்டமிட்டு சிக்கவைத்தார்கள் என, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன் தெரிவித்துள்ளார்.

உடுப்பிட்டி இலக்கணாவத்தை தேவன்குறிச்சி, அறிவகம் சனசமூக நிலையத்தில் நேற்று நண்பகல் இடம்பெற்ற, சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வின் போது, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முருகன் தொலைபேசி வழியாக அனுப்பிவைத்த அஞ்சலி உரை ஒலிபரப்பட்டது.

இதன் போதே மோ ற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன் உள்ளிட்ட நாம் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டோம். இதன் முலம் தமிழீழ விடுதலை புலிகளை தடைசெய்து தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நோக்கத்தில் இவ்வாறு திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டோம்.

கடந்த 32 வருடங்கள் உடல், மன ரீதியாக பலமாக இருந்த சாந்தன் சிறப்பு முகாமில் ஒரு வருடம் கூட தாக்குப் பிடிக்க முடியாது உயிரிழந்தார். சாந்தனின் உயிர் திட்டமிட்டு பறிக்கப்பட்டது.

சாந்தனின் உயிர் பறிப்பிற்கு உரிய நீதிகிடைக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழர்களும், சாந்தன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதன் மூலமே மிச்சமிருக்கும் எங்கள் மூவருக்கும் விடுதலை கிடைக்க வழியேற்படும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )