
ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் அனுசரணை நாடுகள் ஆழ்ந்த கரிசனை
இலங்கையில் மனித உரிமைகள் நல்லிணக்கம் போன்றவை தொடர்பில் காணப்படும் சட்டங்கள் சில கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளதாக ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன.
பிரிட்டன், கனடா ,மலாவி, மொன்டிநீக்ரோ, வடமசடோனியா ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் மனித உரிமைகள் நல்லிணக்கம் தொடர்பில பல சட்டங்கள் தொடர்பான விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் சில கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளன.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இணையவெளி உரையாடலை கட்டுப்படுத்தும் தன்மைவாய்ந்ததாகவும் அனைத்துவகையான கருத்து வெளிப்பாடுகளையும் குற்றமாக்ககூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இந்த சட்டமூலம் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தில் அச்சம் தரும்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.
இலங்கையின்மனித உரிமைகள் கடப்பாடுகள் மற்றும் அர்ப்பணிப்புகளுடன்இந்தசட்டத்தை இணைக்கும் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு நாங்கள் இலங்கைஅரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கை அரசாங்கம்பயங்கரவாத தடைச்சட்டத்தைநீக்கிவிட்டு அதன் சர்வதேச கடப்பாடுகளிற்கு ஏற்ற சட்டமூலத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவந்துள்ளோம்.
கடந்த நவம்பரில் கைது செய்யப்பட்ட 9 தமிழ் தலைவர்கள் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
நியாயமற்ற முறையில் நீண்டகாலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்யவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
உண்மை நல்லிணக்கம் ஐக்கிய ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
எந்த சட்டமூலம் குறித்தும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு அனைவரையும் உள்வாங்கும் அனைவரும் பங்கேற்கும் நடைமுறை அவசியம் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம்
எந்த எதிர்கால ஆணைக் குழுவும் சுயாதீனமானதாக அனைவரையும் உள்வாங்குவதாக அர்த்தபூர்வமானதாக வெளிப்படையானதாக பாதிக்கப்பட்ட சமூகத்தின்எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக காணப்படவேண்டும்.
மேலும் இது கடந்தகால நிலைமாற்று கால நீதிச் செயற்பாடுகளின் மேல் கட்டியெழுப்பப்பட்டதாக பொறுப்புக் கூறலிற்கான பாதையை உருவாக்ககூடியதாக காணப்படவேண்டும்.
நிலங்களை விடுவிப்பது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கும் அதேவேளை வடக்கில் நிலங்களை கைப்பற்றுவதில் காணப்படும் பதற்றம் தொடர்பில் குறிப்பாக கிழக்கில் காணப்படும் நிலை தொடர்பில் வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் நாங்கள் கரிசனைகளை கொண்டுள்ளோம்.