
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி’ என்று அறிவித்து இந்தியாவிடம் நாட்டைக் காட்டிக் கொடுத்த ஹரின்
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இலங்கையின் சுயாதீனத்தன்மை இந்தியாவிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது.அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்தியாவுக்கு சென்று ‘இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி’ என்று அறிவித்துள்ளார். இது மிகப்பாரதூரமானது. நாட்டின் சுயாதீனத்தை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்கும் செயற்பாடுகளையே ஆட்சியாளர்கள் முன்னெடுக்கிறார்கள்.ஆகவே நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், சுயாதீன எதிரணி எம்.பி.யுமான விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார்
தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்த அவர் மேலும் கூறுகையில்,
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்தியாவுக்கு சென்று இராஜதந்திர நிகழ்வில் கலந்து கொண்டு’இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி’ என்று அறிவித்துள்ளார். இது பாரதுரமானது.அத்துடன் அவர் இலங்கையின் விமான நிலையம்,துறைமுகம் ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.இது நடந்தால் முழு இலங்கையையும் இந்தியாவுக்கு கையளிக்க வேண்டி ஏற்படும்.
நாட்டின் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும்,இலங்கைக்குள் பிற இராச்சியத்தை உருவாக்குவதற்கு நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்றும் மக்கள் பிரதிநிதிகளான நாம் பதவிப் பிரமாணம் செய்துள்ள நிலையில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்தியாவுக்கு சென்று ‘இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி’ என்று அறிவித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
வெளி நாடுகளின் அமைச்சர்கள் இவ்வாறு பாரதூரமான கருத்தை கூறியிருந்தால் அவர்கள் பதவி நீக்கப்பட்டிருப்பார்கள்.ஹரின் பெர்னாண்டோ விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முறையாகச் செயற்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது.நாட்டின் சுயாதீனத்தை நாங்கள் பாதுகாத்தோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் ராஜபக்ஷர்கள் நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அதிகாரத்தை கைப்பற்ற போராடும் தரப்பினர் அறிந்தும் அறியாதவர்கள்போல் இருக்கிறார்கள்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இலங்கையின் சுயாதீனத்தன்மை இந்தியாவிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது..இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எட்கா ஒப்பந்தம் எதிர்வரும் மாதம் கைச்சாத்திடப்படவுள்ளது.இதன்மூலம் இலங்கையின் சேவை பொருளாதாரம்,தொழில் வர்த்தகம்,வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியர்களுக்கு முழுமையான வாய்ப்பளிக்கப்படும்.இதனால் இலங்கையர்கள் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ளப்போகின்றார்கள்.
இவ்வாறானதொரு நிலையில் இந்தியாவில் இலங்கை அமைச்சர் ஒருவர், ‘இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி’ என்று கூறுவது கோழைத்தனமான செயல் என்றும், அந்த தீவிர அறிக்கையை எதிர்கொள்ளும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றினோம்’ என்று கூறும் ராஜபக்சக்கள், திராணியற்ற எதிர்க் கட்சித் தலைவர், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் மற்ற கும்பல் குழுக்களும் வாயடைத்துப் போயுள்ளனர்.
மேலும் ‘சே’ யும் வாயை மூடிக்கொண்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இலங்கையில் இந்திய அடிமைத்தனம் எவ்வளவு தீவிரமாக நடக்கிறது? இந்த அரசாங்கமும், ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் எதிர்க் கும்பல்களும் எந்த அளவுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்கள்? இலங்கையை இந்தியாவுடன் இணைப்பதற்கான “சிறந்த நேரம்” வந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்பது அந்த அறிக்கையிலிருந்து தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் ஒருவர் குறிப்பிட்ட நாட்டிற்குச் சென்று தனது நாடு அந்நாட்டின் ஒரு பகுதி என்று கூறுவது பாரதூரமானதல்லவா? அத்தகைய அறிக்கையை வெளியிட அவருக்கு தார்மீக மற்றும் சட்ட அதிகாரம் உள்ளதா? தாம் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும்போது நாட்டின் ஐக்கியத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்வதாகவும், அதனை எந்த பாராளுமன்ற உறுப்பினரும் மீற முடியாது.