ராமேஸ்வரம் மீன்பிடி விசைப் படகுகளில் கறுப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம் மீன்பிடி விசைப் படகுகளில் கறுப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகின் ஓட்டுனருக்கு இலங்கை நீதிமன்றம் ஆறு மாத சிறை தண்டனை மற்றும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தமையை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீனவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கறு ப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தினர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்ததை கண்டித்து நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவை புறக் கணிப்பதுடன் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )