19 வயது யாழ்.யுவதியுடன் ஓடிய வயோதிபரை திருமணம் செய்து வைப்பதாக அழைத்து அடித்தே கொன்ற ஊர் மக்கள்

19 வயது யாழ்.யுவதியுடன் ஓடிய வயோதிபரை திருமணம் செய்து வைப்பதாக அழைத்து அடித்தே கொன்ற ஊர் மக்கள்

யாழ்ப்பாணம் – சங்குவேலி பகுதியில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை நேற்று சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சங்குவேலி பகுதியை சேர்ந்த ஜெகதாஸ் (54) என்பவர் தனது 19 வயது காதலியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ஊரை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்தநிலையில் ஊர் திரும்பியுள்ளனர்.

பிறகு ஊரவர்கள் ஜெகதாஸ் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்கப்பட்ட குடும்பஸ்தர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், குடும்பஸ்தரை தாக்கியதாக கூறப்படும் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் குறித்த விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )