ரணில் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?

ரணில் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?

ரணில் விக்கிரமசிங்க யார் என்பதை சரியாக தெரிந்து கொள்ளாமலே பொதுஜன பெரமுன கட்சியினர் அவரை ஆதரிக்கின்றனர் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கி பிணை முறி கொள்ளையை மக்கள் முன் வெளிப்படுத்தியவர் தான் என்றே பந்துல குணவர்தன தேர்தலில் போட்டியிட்டார். ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்க நாங்கள் பைத்தியங்கள் அல்ல என்று ரோஹித அபேகுணவர்தன கூறியதுடன் ரணில் சிறைக்கு செல்லும் நாளில்தான் நான் உறங்குவேன் என்று கூறிய மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரே கடன் மறுசீரமைப்பு சட்டத்தை ஆதரிக்கின்றனர்.

இவர்கள் எப்படி நாட்டை கட்டியெழுப்பப் போகின்றனர். ரணிலை பற்றி மொட்டு கட்சியினருக்கு எதுவும் தெரியாது. நாங்கள் அவரைப் பற்றி நன்கு அறிந்துள்ளோம். கடன் பெறவும் விற்கவுமே தெரியும். இந்நிலையில் கடன் மறுசீரமைப்பு சட்டம் எவ்வளவு சிக்கலானது என்று புரியும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )