ஜே.வி.பி. இரட்டை நிலைப்பாட்டில்?; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ஜே.வி.பி. இரட்டை நிலைப்பாட்டில்?; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளூர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் அரசாங்கத்துடன் ஜே.வி.பி. இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

நாட்டில் பல பாரதூரமான விடயங்கள் முன்வைக்கப்பட்ட போதும் ஜே.வி.பி அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாதது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.

அரசாங்கத்தின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பணிகள் பொதுமக்களின் ஊழியர் சேமலாப நிதிக்கு பாரிய சிக்கலை உருவாக்கியுள்ள போதிலும், ஜே.வி.பி. அதைப் பற்றி எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

விஜித ஹேரத் மற்றும் ஹரிணி அமரசூரிய ஆகியோர் இவ்விடயம் தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. இவ்விடயத்தில் மொத்த கட்சியும் மௌனம் காப்பதால் ஜே.வி.பி.யின் இரட்டை நிலைப்பாட்டினை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )